மாவீரர்நாளை நினைவுகூர தயாராகுங்கள் – மக்களுக்கு அழைப்பு

தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக தமது இன்­னு­யிர்­களை உவந்­த­ளித்த புனி­தர்­க­ளா­கிய மாவீ­ரர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­காக எதிர்­வ­ரும் நவம்­பர்-27 மாவீ­ரர் நாளைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு இப்­போதே தயா­ரா­கு­மாறு கிளி­நொச்சி மாவட்ட மாவீ­ரர் பணிக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது.

கிளி­நொச்சி மாவீ­ரர் பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சாலை முன்­பா­வுள்ள இடத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது. அங்கு பணிப்­புழு இவ்­வாறு அழைப்பு விடுத்­தது.

கிளி­நொச்சி மாவட்ட மாவீ­ரர் பணிக்­கு­ழு­வின் தலை­வர் சுப்­பி­ர­ம­ணி­யம் பசு­ப­திப்­பிள்ளை இது தொடர்­பில் மேலும் தெரி­வித்­தவை வரு­மாறு:

தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக தாம் வாழ­வேண்­டிய வய­தில் தம்­மையே கொடை­யாக்­கிய புனி­தர்­க­ளா­கிய மாவீ­ரர்­களை ஒவ்­வொரு வரு­ட­மும் நவம்­பர்-27 ஆம் திகதி மாவீ­ரர் நாளாக தமி­ழர் தாய­கத்­தி­லும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் தமிழ் மக்­கள் மிக­வும் உணர்­வெ­ழுச்­சி­யா­கக் கடைப்­பி­டிப்­பது வழமை.

அந்த வகை­யில் இந்­த­மு­றை­யும் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள கன­க­பு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லம், முழங்­கா­வில் மாவீ­ரர் துயி­லும் இல்­லம் ஆகி­ய­வற்­றில் உணர்­வெ­ழுச்­சி­யா­கக் கடைப்­பி­டிக்­கத் தயா­ராகி வரு­கின்­றோம்.

2008 ஆம் ஆண்­டின் பின்­னர் 7 வரு­டங்­கள் தமி­ழர் தாய­கப் பகு­தி­க­ளி­லுள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளில் தமிழ் மக்­கள் தமது உற­வு­க­ளான மாவீ­ரர்­களை விதைத்த கல்­ல­றை­க­ளில் சுட­ரேற்றி நினை­வு­கூர முடி­யா­த­படி இரா­ணு­வத்­தி­னர் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­களை இடித்­த­ழித்­துத் துவம்­சம் செய்­தி­ருந்­த­னர்.

மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளி­லுள்ள மாவீ­ரர்­க­ளின் கல்­ல­றை­க­ளின் மேல் இரா­ணு­வ­மு­காம்­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இரா­ணுவ அச்­சு­றுத்­தல்­க­ளும் காணப்­பட்­டன.

ஆட்சி மாற்­றத்­தைத் தொடர்ந்து கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளி­லி­ருந்த இரா­ணுவ முகாம்­கள் அகற்­றப்­பட்டு துயி­லும் இல்­லங்­கள் இரா­ணு­வக் கண்­கா­ணிப்­பின் கீழ் காணப்­பட்­டன.

மாவீ­ரர்­க­ளான தமது உற­வு­களை மாவீ­ரர் நாளில் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் நினை­வு­கூ­ரு­வ­தற்­கா­கக் காத்­தி­ருந்த மாவீ­ரர்­க­ளின் உற­வு­கள் கடந்த வரு­டம் கிளி­நொச்சி மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளுள் தற்­து­ணி­வா­கச் சென்று சிர­ம­தா­னம் செய்து கடந்த வரு­டம் மாவீ­ரர் நாள் நிகழ்­வு­களை மிக­வும் உணர்­வெ­ழுச்­சி­யா­கக் கடைப்­பி­டித்­தி­ருந்­தோம்.

ஆனா­லும் தமி­ழர் தாய­கத்­தின் பல பாகங்­க­ளி­லும் உள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளின் மீது இரா­ணுவ முகாம்­கள் தற்­போ­தும் காணப்­ப­டு­கின்­றன. அவை எப்­போது விடு­விக்­கப்­ப­டும், அங்கு விதைக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளான புனி­தர்­களை எப்­போது அங்கே அவர்­க­ளின் கல்­ல­றை­க­ளில் நினை­வு­கூ­ரப்­போ­கின்­றோம் என்ற எதிர்­பார்ப்­புக்­க­ளு­ட­னும் ஏக்­கத்­து­ட­னுமே நாம் இருக்­கி­றோம்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளான கன­க­பு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லம், முழங்­கா­வில் மாவீ­ரர் துயி­லும் இல்­லம் ஆகி­ய­வற்­றில் இந்­த­மு­றை­யும் மிக­வும் உணர்­வெ­ழுச்­சி­யாக மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

மாவீ­ரர் நாள் நிகழ்­வு­களை உணர்­வெ­ழுச்­சி­யா­க­வும் சீரான ஒழுங்­கு­ப­டுத்­த­லு­ட­னும் கடைப்­பி­டிப்­ப­தற்­காக மாவீ­ரர் நாள் ஒழுங்­க­மைப்­புப் பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

கிளி­நொச்­சி­யின் பல பாகங்­க­ளி­லும் இருந்­தும் மாவீ­ரர்­க­ளது உற­வி­னர்­கள், முன்­னாள் போரா­ளி­கள், மத­கு­ரு­மார் ஆகி­யோரை உள்­ள­டக்கி சட்­டப்­படி பிர­தேச சபை­யி­னது அனு­ம­தி­யு­டன் இந்­தப் பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­கா­கப் போரா­டிய தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் இணைந்து தமி­ழர்­க­ளின் விடி­வுக்­கா­கப் போராடி தம் இன்­னு­யி­ரையே கொடை­யாக்­கிய எமது மாவீ­ரர்­களை நவம்­பர்-27 அன்­றைய தினம் நினை­வு­கூ­ரு­வ­தற்கு தயா­ரா­கும் நாம் அர­சி­ய­லுக்­கப்­பால் சென்று கட்சி பேதங்­களை மறந்து நாம் எல்­லோ­ரும் உணர்­வுள்ள தமி­ழர்­கள் என்ற எண்­ணத்­து­டன் செயற்­ப­டத் தயா­ரா­கு­வோம் – என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்