இத்தாலியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்-இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்

இத்தாலியின் மிலன் நகரில் இந்திய மாணவர்கள் மீது நடந்துள்ள தாக்குதல் குறித்த நிலமையை கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் இந்திய மாணவர்கள் சிலர் படித்து வருகின்றன. கடந்த 17-ம் தேதி மூன்று மாணவர்களை சிலர் பீர் பாட்டிலால் தாக்கியதாக செய்தி வெளியானது. அவர்களின் நிறம் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்திய தூதரகம், ‘இந்திய மாணவர்கள் பயப்பட வேண்டாம். இந்த சம்பவங்கள் மிலன் நகரில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ’இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி, மாணவர்கள் பயப்பட வேண்டாம். நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருடனான பேச்சு வார்த்தையை திடீரென ரத்து செய்வதாக அறிவித்தபின் முதன்முறையாக வட கொரிய
சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*