பெளத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதை கூட்டமைப்பு எதிர்க்காது-சுமந்திரன்

இலங்கை கூட்­டாட்சி அர­சாக இருக்­க­வேண்­டும், சிங்­கள மக்­கள் விரும்­பி­னால் பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு ஆட்­சே­பனை இல்லை.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும், வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லின்­போது மகிந்த ராஜ­பக்ச வெளி­யிட்ட தேர்­தல் அறிக்­கை­யில், தனது ஆட்சி அமைந்து ஒரு­வ­ருட காலத்­தி­னுள் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

அவ­ரது தேர்­தல் அறிக்­கை­யில் கூறப்­பட்­டதே தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான நிலை­யில் எவ்­வாறு அவ­ரு­டைய அணி­யி­னர் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­களை எதிர்க்க முடி­யும்.

நாட்­டில் உள்ள அனைத்து மதங்­க­ளை­யும் சம­மா­கவே மதிக்­கின்­றோம். அனைத்­துக்­கும் சம அங்­கீ­கா­ரம் வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது தான் எமது கோரிக்­கை­யா­க­வுள்­ளது.

இருப்­பி­னும் பௌத்த மதத்­தினை பின்­பற்­றும் மக்­கள் பௌத்த மத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் அல்­லது தற்­போ­துள்­ள­தைப்­போன்றே புதிய அர­ச­மைப்­பி­லும் அமை­ய­வேண்­டும் என்று விரும்­பு­வார்­க­ளா­யின் அதனை நாம் எதிர்க்­கப் போவ­தில்லை. எமக்கு எந்­தப்­பி­ரச்­சி­னை­யும் இல்லை.

ஆனால் ஏனைய மதங்­க­ளுக்­கான உரிய அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட வேண்­டும்.
இலங்கை அரசு கூட்­டாட்சி அர­சாக இருக்­க­வேண்­டும் என்று நாம் கோரு­கின்­றோம். நாடு பிரி­வ­டைந்து செல்­லப்­போ­கின்­றது என்று பரப்­புரை மேற்­கொள்­ப­வர்­கள் ஒரு விட­யத்­தினை தெரிந்து கொள்­வது அவ­சி­ய­மா­கின்­றது.

இந்த நாட்­டில் கூட்­டாட்சி என்ற விட­யத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­வர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க. இவர் 1926ஆம் ஆண்டு கூட்­டாட்சி அரசு முறை­மையை வலி­யு­றுத்தி ஆறு கடி­தங்­களை எழு­தி­யுள்­ளார்.

1944ஆம் ஆண்டு கம்­னி­யூஸ்ட் கட்­சி­யா­னது கூட்­டாட்சி அரசு முறை­மையை வலி­யு­றுத்­தி­யது. பீற்­றர்­கெ­ல­மன் மற்­றும் வைத்­தி­யங்­கம் ஆகி­யோர் அறிக்­கை­யில் இந்த விட­யம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்­ன­தாக டொன­மூர் ஆணைக்­கு­ழு­வில் இந்த நாடு மூன்று அல­கு­க­ளாக இருக்­க­வேண்­டும். வடக்­கும் கிழக்­கும் இணைந்து இருக்­க­வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது. கண்­டி­யத் தலை­வர்­கள் இரண்டு தட­வை­கள் கூட்­டாட்சி தொடர்­பி­லான விட­யத்­தினை முன்­வைத்­துள்­ள­னர்.

தமி­ழர்­கள் பிரிந்து செல்­வ­தற்­கா­கவே கூட்­டாட்­சி­யைக் கோரு­கின்­றார்­கள் என்­பது தவ­றான அர்த்­தப்­ப­டுத்­த­லா­கும். தமி­ழர்­க­ளுக்கு முன்­ன­தாக பெரும்­பான்மை இனத்­த­வர்­களே கூட்­டாட்சி விட­யத்­தினை வலி­யு­றுத்­தி­யுள்­ளார்­கள்.

கூட்­டாட்சி என்­பது பிரிந்து செல்­லும் விட­யம் அல்ல. இலங்கை நாடு ஒரு நாடாக இருக்க வேண்­டும் என்­பதே எமது நிலைப்­பா­டா­கும். அனை­வ­ரும் ஐக்­கி­ய­மா­க­வும் சமத்­து­வ­மா­க­வும் நடத்­தப்­ப­டும் சூழல் ஏற்­ப­ட­வேண்­டும் என்­பதே எமது நிலைப்­பா­டா­கும். அது அர­ச­மைப்பு ரீதி­யாக தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டும்.

நாட்­டின் இறை­மை­யா­னது பெரும்­பான்­மையை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருக்­கக் கூடாது. நாட்டு மக்­கள் அனை­வ­ரும் தமது இறை­மை­யைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய சூழல் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும். இந்த நாடு ஒன்­றாக இருக்­கும் அதே­நே­ரத்­தில் ஆட்சி அதி­கா­ரத்­தில் எமது மக்­க­ளும் பங்­கா­ளர்­க­ளாக வேண்­டும்.

அதி­கா­ரங்­களை ஒரு தரப்­பி­னரே பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­கின்ற நிலை­யில் மற்­றைய தரப்­பி­னர் எவ்­வாறு அவர்­க­ளுக்கு தாங்­க­ளும் சம­மா­ன­வர்­கள் என்ற மன­நி­லைமை ஏற்­ப­டும். அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்டு அனை­வ­ரும் சமத்­து­வ­மா­ன­வர்­கள் என்ற மன­நி­லைமை உரு­வாக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

தமிழ் மக்­கள் தாங்­கள் இரண்­டாம் தரக் குடி­மக்­கள் அல்­லர். தாங்­கள் இலங்­கை­யர்­கள் என்ற நிலைமை தோற்­று­விக்க வேண்­டி­யுள்­ளது. தமிழ் மக்­கள் ஆட்­சிக் கட்­ட­மைப்­பில் பங்­கேற்­கின்ற நிலமை உரு­வாக்­கப்­பட வேண்­டும்.

13ஆவது திருத்­தச்­சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது அதற்கு எதி­ரா­கப் புறக்­கோட்­டை­யில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டத்­தில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வும் ஈடு­பட்­ட­டி­ருந்­தார். தற்­போது அவர் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல் பிற்­போ­டப்­ப­டு­வ­தாக குற்­றம் சாட்­டு­கின்­றார், போராட்­டங்­களை நடத்­து­கின்­றார். இது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்­கு-­கி­ழக்கு மக்­க­ளின் பெரும்­பான்மை ஆணை­யைப் பெற்ற கட்சி. எமது மக்­கள் வழங்­கிய ஆணைக்கு எதி­ராக எம்­மால் செயற்­ப­ட­மு­டி­யாது. தேசிய பிரச்­சி­னைக்கு நியா­ய­மான தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டும். வடக்கு – கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்­டும் என்றே எமது மக்­கள் ஆணை வழங்­கி­யி­ருக்­கின்­றார்­கள்.

அவர்­க­ளின் உரி­மை­களை, வேண­வாக்­களை மறுப்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவர்­கள் திருப்­தி­ய­டைக்­கூ­டிய தீர்­வொன்று கிடைத்­தால் நாம் அத­னைப் பெற்­றுக்­கொண்டு எமது மக்­கள் முன்­னால் செல்­வோம். அவர்­கள் அங்­கீ­கா­ரம் அளிப்­பார்­கள் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது – என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்