மாகாணசபைக்கு வழங்கப்படவிருந்த காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கம்!

மகாநாயக்க தேரர்களினதும், மகிந்த ராஜபக்ஷ அணியினரதும் தொடர்ச்சியான எதிர்ப்புக் காரணமாக மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தினாலும், காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

இடைக்கால அறிக்கையில், காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக எதுவும் கூறப்படவில்லையெனவும், 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்குள் மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரங்கள் விஸ்த்தரிக்கப்படலாம்.

மகாநாயக்க தேரர்கள், கூட்டு எதிர்க்கட்சியினர் உட்பட பல சிங்கள பௌத்த அமைப்புக்கள் அரசாங்கத்துக்கு தொடரச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதனால் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாதெனவும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கே வழங்கமுடியாது எனவும், அதன் காரணமாகவே இடைக்கால அறிக்கையில் கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்