அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 6ஆம் தேதி சாட்சிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை மற்றொரு நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப் பதிவுசெய்தனர்.

இந்த வழக்கு நீண்ட காலமாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவின் படி, இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வரை குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கேள்விகளைத்தான் கேட்க வேண்டும் என குற்றஞ்சாட்டபட்டவர் கேட்பது நீதிக்கு எதிரானது என்று டி.டி.வி. தினகரனுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 6ஆம் தேதி சாட்சிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
ஆர்.கே நகரில் தினகரன் பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் தினகரன் பெற்ற
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுள்ளார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து
தினகரனுடன் புதுவை எம்பி கோகுல கிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். இவர் தினகரன் அணியிலிருந்து முதல்வர் அணிக்கு தாவிவிட்டு தற்போது மீண்டும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*