யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, தும்பளை பகுதியை சேர்ந்த 50 வயதான குணராசா அம்பிகை என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கிய மகளைக் காப்பாற்றச் சென்ற தாயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கழற்றப்பட்டிருந்த அலைவரிசைக் கேபிளை தொலைக்காட்சியுடன் இணைக்க மகள் முயன்றுள்ளார்.
இதன்போது மகளை மின்சாரம் தாக்கியுள்ளது. மகளை காப்பாற்ற முற்பட்ட வேளையில், தாயை மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

