போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்.பல்கலை மாணவர்களை சந்தித்த அனந்தி சசிதரன்!

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்களை வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த திங்கட்கிழமை காலை 7 மணி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யாழ் பல்கலையில் கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.

தமது வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றதில் இருந்து வவுனியாவிற்கு மாற்றுமாறும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றகோரி கடந்த 35 நாட்களாக உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்களுக்கு அதரவாக கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு சிறீலங்கா ஜனாதிபதியும் சந்தித்திருந்தனர். எதுவித முடிவுகளும் கிடைக்காத நிலையில் கதவடைப்பு போராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்