மாணவியொருவர் சடலமாக மீட்ப்பு!

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்மாந்துறை சுடரொளி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயிலும், இராசன் விதுஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடைசியாக இவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்கும், அதன்பின்னர் அன்றைய தினம் மாலையில் பிரத்தியேக வகுப்புக்கும் சென்று வந்துள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்த மாணவிக்கு, அவரிலும் பார்க்க 13 வயது கூடிய, அவுஸ்திரேலியா சென்று திரும்பியிருந்த ஒருவரை பெற்றோர் திருமணத்துக்காக நிச்சயித்திருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்