அரியாலை துப்பாக்கி சூடு:அதிரடிப்படையினருக்கு தொடர்பு – சிக்கியது ஆதாரம்!

அரியாலை கிழக்கு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட முச்சக்கர வண்டி பண்ணையில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் நேற்று இரவு சீ ஐ டியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அரியாலை கிழக்கு பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி டொன்பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான விசாரணை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். விசேட அதிரடிப்படை முகாமில்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிள் என்பன கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

அதற்கிடையில் சீ ஐ டி யினரிடம் வழக்கு பாரப்படுத்தப்பட்ட காரணத்தால் கைது நடவடிக்கை பொலிஸார் இடைநிறுத்தினர்.

இந்நிலையில் நேற்று இரவு பண்ணை விசேட அதிரடி படை முகாமில் சீ ஐ டி யினரால் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது

About இலக்கியன்

மறுமொழி இடவும்