அலவாங்கால் தாக்கி குடும்பஸ்தரின் உயிர்பறிப்பு!

குடும்பத் தகராறினால் ஏற்பட்ட மோதலில் அலவாங்கினால் தாக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் அதேயிடத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையாரான கஜன் ரமேஸ் (வயது -50) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியை அண்மித்த இரு குடும்பஸ்தர்களிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இத்தகராறு வாய்ச் சண்டையாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை 5.00 மணி யளவில் பிரஸ்தாப குடும்பஸ்தரை வீட்டிற்கு வெளியே வருமாறு அழைத்து திடீரென அலவாங்கினால் தாக்கியுள்ளார்.

இதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சையிலிருந்த அவர் நேற்று (30.10.2017) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தரை தாக்கிய நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்