புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு!

புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற நபர்களை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

நேற்று இரவு கள்ளியடிப்பகுதியில் 40 கால்நடைகள் அனுமதிபெறாமல் முள்ளியவளைக்கு வீதியால் கொண்டுசெல்ல முற்பட்ட வேளை புதுக்குடியிருப்பு பொலீஸார் 5பேரையும் கால்நடைகளையும் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்கள் இன்று மாலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்