தமிழரசுக் கட்சியின் சின்னம் வேண்டாம்! சுரேஷ்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஈ.பி.ஆர்.எல்.எவ். போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லையென அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமாயிருந்தால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் கிராமமட்ட தேர்தலாகும். இந்நிலையில், எமது கட்சி தனித்தோ அல்லது பொதுச்சின்னத்திலோ போட்டியிடலாம்.

ஒத்த கருத்துடைய வேறு தரப்பினருடன் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றில்லை என்றார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்