மக்­க­ளின் அதி­ருப்­தி­யைச் சமா­ளிக்க வேண்­டிய சிக்­கல் நிலமை கூட்­ட­மைப்­புக்கு!

மக்­க­ளின் அதி­ருப்­தி­யைச் சமா­ளிக்க வேண்­டிய சிக்­கல் நிலமை கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­க­ளின் ஏகப் பிர­தி­நி­தி­கள் என்ற அந்­தஸ்­து­டன் வலம் வந்து கொண்­டி­ருக்­கும் கூட்­ட­ மைப்­பி­னர், இன்று தமிழ் மக்­க­ளைக் கண்டு அஞ்­சு­கின்ற நிலை­யில் உள்­ளமை வெட்­கத்­துக்­கும், வேத­னைக்­கும் உரி­யது.

மக்­க­ளின் பிரச்­சி­னை ­க­ளுக்­குத் தீர்வு கிட்­டி­யி­ருந்­தால் அவர்­க­ளைக் கண்டு அஞ்ச வேண்­டிய நிலை கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­காது.

ஆனால் மக்­க­ளின் பிரச்­சி­னை ­கள் எது­வும் தீர்க்­கப்­பட்­ட­ தா­கத் தெரி­ய­வில்லை. தமி­ழர்­க­ளின் ஏகப் பிர­தி­நி­தி­கள் தாமே எனக் கூறிக்­கொள்ளும் கூட்­ட­மைப்­பி­னர் இதற்­கான பொறுப்பை ஏற்­றுக் கொள்ள வேண்­டிய கட்டாயத்தில் இன்­றுள்­ள­னர்.

கூட்­ட­மைப்­பில் இல்லை ஒற்­று­மைத் தன்மை

கூட்­ட­மைப்பு இன்று ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­கின்­றதா? என்ற கேள்வி எழு­மா­யின், இல்­லை­யென்­ற­ப­திலே கிடைக்­கும். கூட்­ட­மைப் பில் உள்­ள­வர்­களே அதன் தலை­வ­ரைப் பகி­ரங்­க­மாக விமர்­சித்து வரு­கின்­ற­னர்.

வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது கூட்­ட­ மைப்­புக்­குள் இடம்­பெற்ற மோதல்­கள் சந்தி சிரிக்க வைத்­து­விட்­டது. அந்த வேளை­யில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் செய­லி­ழந்த நிலை­யில் காணப்­பட்­டார்.

அவ­ரது சொல்லை முத­ல­மைச்­சர் உட்­பட வேறு எவ­ரும் மதித்­த­தா­கத் தெரி­ய­வில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப்­பின் தலை­வர் சம்­பந்­தனை விமர்­சிப்­ப­தையே வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கின்­றார்.

தீர்க்­கப்­ப­ட­வில்லை மக்­கள் பிரச்­சினை

போர் ஓயந்து போனா­லும் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் தீர­வில்லை. பல விட­யங்­க­ளில் இவர்­கள் தொடர்ந்து ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­ற­னர். அரச தலை­வர் தான் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத நிலை­யில் காணப்­ப­டு­கின்­றார்.

புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பா­கச் சம்­பந்­தன் மிகுந்த நம்­பிக்­கை­யு­டன் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தார். தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு இதுவே தீர்­வாக அமை­யு­மென நம்­பிக்கை ஊட்­ட­வும் அவர் தவ­ற­வில்லை. மக்­க­ளும் தலை­வ­ரின் சொல்லை ஏற்று அதை நம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

ஆனால் அதி­லும் சிக்­கல் நிலை தோன்­றி­யுள்­ள­தைச் சமீப நாள்­க­ளாக அவ­தா­னிக்க முடி­கின்­றது. சம்­பந்­த­னுக்கு எதி­ரா­ன­வர்­கள் இதைத்­தான் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். கூட்­ட­ மைப்­பின் ஆளு­கைக்­குள் இருந்த உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளால் மக்­க­ளின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்ற முடி­யா­மல் போனதை ஏற்­றுக்­கொள்­ளத்­தான் வேண்­டும்.

இதை­விட ஆளும் தரப்­பி­னரே அங்கு மோதிக்­கொண்­ட­தை­யும் மக்­கள் விரும்­ப­வில்லை. முகம் சுளிக்­கவே செய்­த­னர். மக்­கள் எத்­த­னையோ இடை­யூ­று­க­ளுக்கு மத்­தி­யில் வாக்­க­ளித்­துத் தேர்ந்­தெ­டுத்த வடக்கு மாகா­ண­சபை அவர்­களை முற்­றா­கவே ஏமாற்­றி­விட்­டது.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக மாகா­ண­சபை எதை­யும் உருப்­ப­டி­யா­கச் சாதித்­த­தா­கத் தெரி­ய­வில்லை. வேட்­பா­ளர் தெரி­வின்­போது தவ­று­கள் இடம்­பெற்­ற­தால் சில மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் தமது பத­விக்கு பொருத்­த­மில்­லாத வகை­யில் நடந்து கொள்­கின்­ற­னர்.

இத­னால் இவர்­க­ளால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் இவர்­கள் மீது மட்­டு­மல்­லாது, கூட்­ட­ மைப்­பின் மீதும் கொதிப்­பில் உள்­ள­னர். சில இடங்­க­ளில் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் சிலர் மக்­க­ளால் துரத்­தி­ய­ டிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளும் இடம்­பெற்­றுள்­ளன.

இனி­மே­லா­வது கட்­சித் தலை­மைக்­குப் பங்­கம் விளை­விப்­ப­ வர்­களை ஒதுக்கி தள்­ளி­விட்­டுப் பொருத்­த­மா­ன­வர்­க­ளைத் தேர்­தல்­க­ளில் வேட்­பா­ளர்­க­ளாக நிய­மிக்க வேண்­டிய மிகப்­பெ­ரிய பொறுப்பு கூட்­ட­மைப்­புக்கு உள்­ளது.

கூட்­ட­மைப்பு இன்று பெய­ர­ள­வுக்கு மட்­டுமே எதிர்க்­கட்­சித் தலை­மைப் பொறுப்பை ஏற்­றுக் கொண்­டுள்­ளதே தவிர அர­சுக்கு ஆத­ர­வான கொள்­கை­யையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது. தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தீர்வு காணப்­ப­டாது கிடப்­பில் போடப்­பட்­டுள்­ள­தையே காண முடி­கின்­றது.

அர­சி­யல் கைதி­க­ளின் விவ­கா­ரம் தொடக்­கம் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சினை, காணி அப­க­ரிப்­புக்கு எதி­ரான போராட்­டம், தமி­ழர் பகு­தி­க­ளில் இடம்­பெற்று வரு­கின்ற அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்­கள், மீன­வர் பிரச்­சினை, இடம் பெ­யர்ந்­தோ­ருக்­கான வீட்­டுத்­திட்­டம், நீண்ட கால­மாக முகாம்­க­ளில் வசிக்­கின்ற மக்­க­ளின் அவ­ல­நிலை ஆகி­யவை இன்­ன­மும் முடி­வுக்­குக் கொண்டு வரப்­ப­ட­வில்லை. மக்­கள் பொறு­மை­யின் எல்­லை­யைக் கடந்த நிலை­யில் உள்­ள­னர்.

மற்­ற­வர்­க­ளை­வி­டக் கூட்­ட­மைப்­பையே இவர்­கள் நம்­பி­யி­ருந்­த­தால் அதன் மீதான வெறுப்­பும் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றது. ஆகவே மக்­களை எவ்­வாறு சமா­ளிப்­பது என்­ப­தை­விட, அவர்­க­ளின் பிரச்­சி­னை­ க­ளுக்­குத் தீர்வு பெற்­றுக் கொள்­ளத்­தக்க முயற்­சி­க­ளில் கூட்­ட­மைப்பு முழு­ ம­ன­து­டன் இறங்க வேண்­டும். இதில் தவறு ஏற்­ப­டு­மா­யின் அதன் விளை­வு­கள் பார­தூ­ர­மாக அமைந்து விடும்

 

About காண்டீபன்

மறுமொழி இடவும்