தமிழ் மக்களுக்கு எதிராக போரை நடத்தியவன் நான் இல்லை – மகிந்த

தமிழ் மக்களுக்கு எதிராக நான் ஒருபோதும் போரை முன்னெடுக்க வில்லை. 30 வருடமாகப் போரை நடத்திய விடுதலைப் புலிகளை முடிவுக்கு கொண்டு வரவே படையி னரை வழிநடத்தி போரை வெற்றி கொண்டேன் என நாடாளுமன்றில் நேற்;று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் பங் கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்றவாறே அதிகாரப்பகிர்வு பரிந்துரைகள் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்ப ட்டுள்ளன.

இது ஏனைய இனங்களின் அரசி யல்வாதிகளுக்கு பாதகநிலையையே ஏற்படுத்தும். இந்த உத்தேச யோசனையை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. வடக்கு-கிழக்கு இணைவதை எதிர்தே 1987ஆம் ஆண்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உரு வானது.

புதிய அரசியலமைப்பை உருவாக்க யாரு க்கும் மக்கள் ஆணை கிடைக்க வில்லை. கபடமாக அதனை நிறைவேற்றும் முயற்சியே முன்னெடுக்கப்படுகிறது என்று மகிந்த மேலும் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்