முதியவரை தாக்கிவிட்டு ஆயுதமுனையில் கொள்ளை – வட்டுக்கோட்டையில் நேற்றிரவு துணிகரம்

வீட்டில் இருந்த முதியவரை கொட்டனால் தாக்கிவிட்டு அவரது மனைவி மற்றும் மகளை ஆயுத முனையில் வைத்து கொள்ளையிட்ட சம்பவமொன்று நேற்று இரவு வட்டுக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்னால் உள்ள வீட்டில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஆயுதங்களுடன் உள்நுழைந்த 5 பேர் கொண்ட இனந்தெரியாத குழுவொன்று வீட்டில் இருந்த முதியவரை கொட்டனால் தாக்கிவிட்டு அவரதுமனைவி மற்றும் மகளை கட்டி வைத்து
விட்டு ஆயுத முனையில் கொள்ளையினை நிகழ்த்தியுள்ளது.

இதில் தாலிக்கொடி சங்கிலி, காப்பு உட் பட 20 பவுண் நகை களவு போயுள்ளது.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரு கின்றனர்.

மேலும் இதில் காயமடைந்த முதியவரான சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் (வயது 69) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்