தமிழ் மக்களின் தீர்வுக்கு பல தடைகள் உள்ளன – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இங்கே பல தடைகள் இருக்கின்றன இவற்றைப் பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்ற சந்தே கம்எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இங்கு அரசியலமைப்பிற்கான விவாதம் நடைபெறும் போது, வெளியில் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

நாடாளுமன்றுக்கு குண்டுபோட வேண்டும் என்று விமல் கூறுகின்றார். இப்படியா னவர்கள் இருக்கும் வரை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா?

தமிழர்களுக்கு தொடர்ந்தும் ஏமாற்றம் கிடைக்கும் என்றால் சர்வதேசத்தை நாடு வதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை.

வெளியில் இருப்பவர்கள் மனதில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இனியும் ஒரு ஆயுதப்போராட்டம் நடைபெறாது என்று யாரும் கூற முடியாது.

தந்தை செல்வா கூறியதைப் போன்று இலங்கை நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று சம்பந்தன் கூறுவதற்கு யாரும் இடமளிக்க கூடாது.

அவ்வாறு நடக்கக்கூடாது என்றால் அனை வரும் இந்த அரசியலமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக் கள் அனைவரும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும்.

மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்