வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இ.போ.ச பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (03.11) காலை யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24வயதுடை இளைஞன் 4கிலோ105கிராம் கேரளா கஞ்சாவினை தனது பயணப்பொதியில் எடுத்துச் சென்றபோது வவுனியா பேருந்து நிலையத்தில் குறித்த நபரில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை சோதனை மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கேரளா கஞ்சாவினை எஸ். ஜ. சுபசிங்க தலைமையில் சென்ற பொலிஸ் பரிசோதகர்களான அனுரா (43210), ஹேரத் (40117), பண்டா (14957), பிரதீப் (45980), சாரங்க (820049), குமார (66201), சமதுங்க (52389) ஆகிய பொலிசார் இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்