சென்னையில் கடும் மழை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார்.

சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், மழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் மற்றும் மழை நீடிக்கவுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி இன்று (03.11.2017) சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்திரவிடபடுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன்ரூபவ் இ.ஆ.ப.ரூபவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

About இலக்கியன்

மறுமொழி இடவும்