தமிழக கேலிச்சித்திரகாரர் பாலா கைது!

தமிழக்கத்தின் முன்னணி கேலிச்சித்திர கலைஞர் பாலா கைதாகியுள்ளார்.சமீபத்தில் கந்து கொடுமையால் இசக்கிமுத்து எனும் பொதுமகனது குடும்பம் தமிழகத்தின் நெல்லை ஆட்சியல் அலுவலகத்தில்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இது தொடர்பாக கேலிச்சித்திரனம் ஒன்றை வரைந்திருந்தார் பாலா. இந்நிலையில், சென்னை போரூரை அடுத்த பெரியபணிச்சேரி இல்லத்திற்கு வந்த சீருடை அணியாத நான்கு காவலர்கள் அவரை தர தரவென இழுத்துச் சென்றார்கள்.

அவருடைய கேலிச்சித்திரத்தின் மீது புகார் இருந்தால் வழக்குத் தொடருங்கள். இது முறையல்ல என்று சொன்ன போதும் அவரது மனைவி உள்ளிட்டவர்களை தள்ளி விட்டு விட்டு தர தரவென இழுத்துச் சென்றார்கள். அநாகரீகமான முறையில் கேலிச்சித்திரத்திற்காக ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈழவிடுதலைப்போராட்டம் மற்றும் இனஅழிப்பு தொடர்பினில் கடும் அதிர்வலைகளை கார்ட்டுன்கள் மூலம் வெளிப்படுத்தியவர் பாலா.அத்துடன் அவர் தீவிர ஈழ ஆதரவு புலமும் கருத்து தெளிவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி
சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்
ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த போது மருத்துவமனையில் இருந்தேன், ஆனால் சிகிச்சை அளிக்க என்னை அனுமதிக்கவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*