தமிழரசு கட்சியில் இணைய மக்கள் சண்டை போடுகிறார்களாம் -சுத்துமாத்து சுமந்திரன்!

இலங்கை தமிழரசு கட்சியில் இணைவதற்கு தமிழ் மக்கள் போட்டிபோட்டு சண்டைபோட்டுகொள்ளும் நிலை தற்போது காணப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களுக்கான இலங்கை தமிழரசு கட்சியின் மூலகிளைக்குழுவின் நிர்வாகத்தெரிவும் கலந்துரையாடலும் முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று கிளைக்குழு நிர்வாகத்தெரிவு முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிர்வாக தெரிவு கூட்டத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட சுமந்திரன்,

இலங்கை தமிழரசு கட்சியின் மூலக்கிளை தெரிவுக்கூட்டம் இன்றையதினம் இங்கே நடைபெற்றது .இந்த கூட்டத்தின் ஆரம்பத்திலே சமகால அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பான விளக்கமும் கட்சியின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலக்கிளை தெரிவு இடம்பெற்றது.இந்த மூல கிளை தெரிவு சம்பந்தமாக நீண்டகாலமாக இழுபறி நிலை காணப்பட்டது. இன்றைக்கும் அந்த தெரிவின் ஆரம்பத்திலே ஒரு குழப்பகரமான சூழல் காணப்பட்டது.இதற்க்கு பிரதானமான காரணம் இலங்கை தமிழரசு கட்சியில் இணைவதற்கு பலர் ஆர்வம் தெரிவிக்கின்றார்கள்.

வேறு எந்தவொரு அரசியல் கட்சியில் இணைவதற்கும் தமிழ் மக்கள் சேர்வதற்கு இந்தமாதிரியான ஒரு போட்டா போட்டி கிடையாது. ஆகவே இது ஒரு ஆரோக்கியமான சண்டையாகவே நாம் பார்க்கின்றோம். எல்லோருமே கட்சியின் உறுப்பினராக வரவேண்டும் எல்லோருமே கட்சியின் செயற்குழுவில் அங்கம் பெறவேண்டும் என்ற அவா மக்களிடம் இருப்பதை நாம் காணமுடிந்தது.அதனால் சில குழப்பகரமான சூழல் காணப்பட்டது.

சில நிர்வாக குறைபாடுகள் காரணமாக இன்று தற்காலிகமாக ஒரு நிர்வாக குழுவை நியமித்துள்ளோம் . அந்த நிர்வாக குறைபாடுகளை சீர் செய்த பிறகு இன்று செய்யபட்ட இன்று தெரிவு செய்யபட்ட தற்காலிக நிர்வாக குழு நாம் உறுதி செய்யலாமா அல்லது மாற்றங்களை செய்யமுடியுமா என்ற ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்