தமிழரசுக் கட்சி கிளைக் குழுக் கூட்டத்தில் கடும் மோதல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைக் குழுக் கூட்டத்தில் நேற்றுக் குழப்ப நிலை ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.

கரைத்துறைப்பற்றுப் பிரதேச மூலக் கிளையின் தெரிவுக் கூட்டம், புதுக்குடியிருப்புப் பிரதேச மூலக் கிளைக் குழுக் கூட்டம் என்பவை நடைபெற்றன. கரைதுறைப்பற்று மூலக்கிளைத் தெரிவுக் கூட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பம் முதலே உறுப்பினர் தெரிவில் இழுபறி நிலைமை காணப்பட்டது. குழப்பநிலைமையால் கூட்டத்துக்கு வந்திருந்த கட்சி ஆதரவாளர்கள் விசனத்தோடு விலகிச் சென்றனர் என்று கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சமாதனப்படுத்தலுடன் புதிய உறுப்பினர்கள் கரைதுறைப்பற்று கிளைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் பின்னர் கட்சியின் ஆரவாளர்கள் மண்டபத்துக்கு வெளியே குழப்பத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About சாதுரியன்

மறுமொழி இடவும்