எதிர்வரும் தேர்தலில் கூட்டணி போட்டியிடும்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடப் பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர்பில் தாம் பரிசீலனை செய்து வருவதாகவும், தமிழர் விடுதலைக் கூட்டணி எல்லாத் தமிழ் மாவட்டங்களிலும் போட்டியிடும் எனவும் கட்சியின் செயலாளர்; நாயகம் ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், எங்கெங்கு தமிழ்மக்கள் வாழ்கின்றார்களோ அவர்களில், தம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, அமைப்புகளாக இருந்தாலும் சரி பொதுக் கொள்கையின் அடிப்படையி;ல் தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தாம் மிகவும் விசுவாசமாக அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்