இரணைமடு குளத்தினருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது

குறித்த பகுதியில் முகாம் அமைத்திருந்த இராணுவம் அண்மையில் குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். நீர்பாசண திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசண திணைக்களத்தின் விடுதிகளை (குவாட்டஸ்) தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதே வேளை குறித்த இரணைமடு குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டி சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்த நிலையில் குறித்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும் நிலையில் குறித்த பகுதி நீர்பாசண திணைக்களத்திற்கு அத்தியாவசியமான பகுதியாக காணப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த பகுதியைவிட்டு வெளியேறியுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இரணைமடு குளத்தின் பார்வையிட அனுமதிக்கப்பட்ட பகுதியில் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி செல்லலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர்
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட

About காண்டீபன்

மறுமொழி இடவும்