வவுனியாவில் கஞ்சாவுடன் யாழ் குடும்பஸ்தர் கைது

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு பேருந்தில் வந்த இளைஞர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அங்கு கடமையில் நின்ற பொலிசார் சோதனை மேற்கொண்டபோது குறித்த நபரின் கைப்பையில் கேரளா கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த நபரிடம் இருந்து 4 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டவராவார். விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட வவுனியா பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்