பிள்ளையான் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஆஜர்!

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 6 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதில் ஒருவர் தேடப்பட்டுவருகின்றார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் நீதிமன்று ஊடாக செல்லும் பிரதான வீதியும் மூடப்பட்டிருந்தது.

இன்றைய அமர்வில் முன்னாள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான எம்.என்.அப்துல்லாவும் மேல் நீதிமன்றுக’கு சமுகம்தந்து விசாரணைகளின்போது சாட்சியங்களை பதிவுசெய்தார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் காலை 10.30 மணி தொடக்கம் இந்த வழக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் நீதிபதி எம்.என்.அப்துல்லாவிடம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளையும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.இன்றை இந்த விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வருகைதந்துள்ள சட்டத்தரணிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்