மாவீரர்நாள் நினைவை முன்னிட்டு யாழ்.உடுத்துறை துயிலுமில்லத்தை சிரமதானம் செய்ய பொதுமக்களை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்றையதினம் திங்கட்கிழமை(06-11-2017) மாவீரர்குடும்பங்கள், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலார் சங்கம், வடமராட்சி கிழக்கு விளையாட்டு கழகங்கள், முன்னாள் போராளிகள் ஒன்றினைந்து மாவீரர்தின ஏற்பாட்டு குழுவை அமைத்திருந்தனர்.
அந்த வகையில் எதிர்வரும் 10-11-2017 அன்று காலை 10.00 மணிக்கு சிரமதானப்பணிகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
மாவீரர்களை நினைவுகூர அனைவரும் ஒன்றினைந்து செயலாற்றுமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

