மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை இராணுவ ஆக்கிரமிப்பில்!

மயிலிட்டியில் இயங்கி வந்த காசநோய் வைத்தியசாலையில் இராணுவத்தினர் சொகுசு விருந்தினர் விடுதி ஒன்றை அமைத்துள்ளனர். இந்தக் காணியை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்தினருடன் பேச்சு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

யுத்தத்திற்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் காச நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காக பிரத்தியேக வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

யுத்தம் நடைபெற்றபோது, வலி.வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பகுதியை இராணுவத்தினர் கையகப்படுத்தினர். இவ்வாறு இராணுவத்தினர் வசமிருந்து கட்டம் கட்டமாக காணிகள் விடுவிக்கப்பட்டன.

மயிலிட்டியும் அண்மையில் விடுவிக்கப்பட்டது. எனினும் அந்த இடத்திலுள்ள நோயாளர்களுக்கான வைத்தியசாலை இருந்த இடத்தில் தற்போது இராணுவத்தினர் விசாலமான விடுதியை அமைத்துள்ளனர்.அந்த இடத்திலிருந்து இதுவரை இராணுவத்தினர் வெளியேறவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்