தமிழ்மக்களுக்கு அரசு தரும் அதிகாரங்கள் போதாது – வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ்மக்களுக்குப் போதியளவான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும். அரசு தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ்மக்களுக்குப் போதாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஊடவியலாளர் இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஒற்றையாட்சியின் கீழ் என்னதான் தந்தாலும், அதன் கீழ் பெரும்பான்மை மக்களுடைய அதிகாரங்களே மேலோங்கி நிற்கும். அந்த அதிகாரத்தின் மூலமாக எமக்குத் தருவதையும் திருப்பி எடுக்கப்படக் கூடிய சூழ்நிலை எற்படும். எனினும் குறித்த அதிகாரங்கள் எடுக்கப்பட மாட்டாது எனச் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் மேலதிகாரம் யார் கைவசம் இருக்கின்றதோ அவர்களால்தான் எதனையும் செய்ய முடியும்.

அரசு தங்களால் என்ன தர முடியுமோ அதைத்தான் தரவுள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால் பிரச்சினைக்கான காரணம் அறியப்பட்டு, அதற்கேற்ப தீர்வை முன்வைக்கப்பட வேண்டும். வெறுமனே இவ்வளவுதான் தரலாம் என்று கூறிக்கொண்டு இருந்தால், பிரச்சினைதக்குத் தீர்வாக அமையாது. அரசு தற்போது தமிழ் மக்களுக்குத் தருவதாகக் கூறுவதைத் தரட்டும், அது அவர்களின் கடப்பாடு. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கான தீர்வு என்ன என்பது தொடர்பில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்