தமிழரசுக் கட்சிக்கு போட்டியாக மீண்டும் புதிய கூட்டுடன் உதயசூரியன்

முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து புதிய அரசியல் அணியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரியவருகிறது. கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்க கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி இணக்கம் தெரிவித்தார் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டணியுடன் இணையவுள்ள ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒவ்வொருஉறுப்பினர்கள் வீதம் ஏழுபேர் கொண்ட உயர் மட்டக்குழுவை அமைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை செயற்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரியின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. ஆனாலும் வடக்குகிழக்கு இணைந்த அரசியல் தீர்வுக்கும் தமிழ்த்தேசியம் என்ற அடிப்படையும் மாற்றமடையாமல் கூட்டணியை கொண்டு நடத்துவதற்கான விருப்பத்தை ஆனந்தசங்கரி வெளிப்படுத்தி உள்ளார் என்றும் கிடைத்த தகவல் கூறுகிறது.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள முக்கியபிரமுகர் ஆனந்தசங்கரியை சந்தித்து பேசியதாகவும் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவரும் ஆன்நதசங்கரியுடன் பேசினார் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. இந்தவிடங்கள் தொடர்பாகமேலும் பேச்சுநடத்தவேண்டும் என்றும் கஜேந்திரக் குமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடனும் பேச்சுநடத்தவேண்டியதேவையிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்