உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!

தேசிய மாவீரர் நாளினை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும் பொருட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திற்கான முதலாம்கட்ட சிரமதானப் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்படி வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்தனர்.

தேசிய மாவீரர் நாளினை அனுட்டிக்கும்பொருட்டு மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கம், வடமராட்சி கிழக்கு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து குறித்த ஏற்பாட்டுக் குழுவினை அமைத்திருந்தனர்.

இதன்படி மாவீரர் நாளினை முன்னிட்டு மேற்படி உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தினைச் சிரமதானம் செய்வதற்காக பொதுமக்கள் அனைவருக்கும் குறித்த ஏற்பாட்டுக்குழு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.

இதனடிப்படையிலேயே குறித்த சிரமதானத்தின் முதற்கட்டப் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கொட்டும் மழையின் மத்தியிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுகப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கதாகும்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்