புதிய கூட்டணி:பொதுசின்னம்:கொள்கை பிரகடனம்!

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் உருவாகியுள்ள புதிய கூட்டணி, பொதுசின்னம்,பொதுப்பெயருடன் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பேரவையின் பங்களிப்புடன், பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளோடு, சிவில் சமூகப் பிரதிநிதிகள் உடன் தொழிற்சங்கங்கள் இக்கூட்டினில் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல் .எப் கட்சி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், புதிய கூட்டணி உருவாகியுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியாக அறிவிக்கப்படாத நிலையினில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டினில் இணையவுள்ளது.
எனினும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவராக உள்ள, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலுக்குள் முடங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் உள்ளபோதும் புதிய இளம் தரப்பினை கொண்ட அரசியல் சக்திகள் உருவாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு, பொதுக்கொள்கைப்பிரகடனுமும் விரைவினில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுமெனவும் அது எழுக தமிழ் பிரகடனத்தை தழுவி அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யைக் குழப்­பு­வது எமது நோக்­க­மல்ல. அனைத்து மக்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளக் கூடிய அர­சி­யல் தீர்வு கிடைக்க வேண்­டும்
ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மேற்கோள் காட்டி எம்.ஏ.சுமந்திரன் கூறுவது அப்பட்டமான பொய்யென தமிழ்த்
சர்வதேசச்சட்டம்நிலைமைக்கேற்றவாறு,சூழலுக்கேற்றவாறு மாறுதல் அடைந்துவந்துள்ளது. எனவே தான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கியநாடுகள் நிலைமாற்ற நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*