த.தே.கூட்டமைப்பைத் தொடர்ந்து தமிழரசு கட்சியும் உடைகிறது!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு நேர் விரோதமாம பாதையில் பயனித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது மக்கள் விரோதப் போக்கினால் விரக்தியடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஸ் அணி தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்து கூட்டமைப்பில் உள்ள பிளவை உறுதிப்படுத்தியுள்ளார்.

கூட்டமைப்பில் தொடர்ந்து இருப்போம் ஆனால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தாலும் கூட்டமைப்பை விட்டு விலகும் முனைப்பாகவே பார்க்கப்பட்டது.தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஈடுபட்டுள்ளதன் மூலம் கூட்டமைப்பின் பிளவு உறுதியாகிவிட்டது.

வெளியில் வலுவான கூட்டணி உருவாகும்பட்சத்தில் புளொட் கட்சியும் கூட்டமைப்பை விட்டு வெளியேறிவிடும் முடிவோடு காத்திருக்கின்றது. இந்த நிலைமையைச் சரி செய்யும் முயற்சியாக சம்பந்தன் தரப்பு மன்னார் ஆயர் மூலம் பேச்சு நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கு மற்றும் தமிழர் விரோத நிலைப்பாடு காரணமாக அதிருப்தியில் இருக்கும் மூத்த தலைவர்கள் சிலரும் இளம் தலைவர்களும் இணைந்து ஜனநாயக தமிழரசு கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் உருவாக்கப்படும் புதிய கூட்டணியில் இணைந்து செயற்பட உள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் புறக்கணிப்பு, பங்காளிக் கட்சிகளின் விலகல், சொந்தக் கட்சியில் பிளவு என அனைத்து பக்கத்திலும் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு சின்னக் கதிர்காமர் சுமந்திரனின் கடும்போக்கே காரணமாகும் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்