உரிமைகளை வென்றெடுக்க சரியான தலைமைத்துவத்தின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது – சுரேஸ்!

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தற்போது சரியான தலைமைத்துவத்துடன் ஒரு புதிய காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் விசேட கலந்துரையாடல் நேற்று யாழ் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் முடிவில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கடந்த சில வருடங்களாக தமிழ் மக்களுக்கு ஒரு மாற்று தலைமை வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. அதன் அவசியம் தற்போது எல்லோராலும் அதிகளவு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் ஆணையை முற்று முழுதாக கைவிட்டுள்ளார்கள். அந்த ஆணை எதுவும் அவர்கள் வசம் தற்போது இல்லை முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சரியான தலைமைத்துவம் ஒரு புதிய அணி தற்போது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது. அது எல்லோராலும் உணராப்பட்டுள்ளது. எமது கட்சி சார்பாக புதிய அணியின் தேவையை வலியுத்தியுள்ளோம்.

தமிழரசுக்கட்சி மிக நீண்டகாலமாக எதேர்சியான அதிகார போக்கில் தான் சகல நடவடிக்கைகளும் செயற்படுத்தி வருகிறது. கூட்டமைப்புக்குள் விவாதம் நடத்தாமல் ஓரிருவர் எடுக்கும் முடிவுகள் திணிக்கப்படுகிறது.

தமிழ் மக்களுக்கு கொடுத்த ஆணைகளை நிராகரிப்பது மட்டுமல்லாமல், சிங்கள தலைவர்கள், நல்லவர் என முத்திரை குத்தும் அளவில் தலைமைகளின் செயற்பாடு உள்ளது.

தமிழ்மக்களின் எதிர்காலம் குறித்து பாரிய கேள்வி உள்ளது. அரசியல் சாசனம் மிகவும் மோசமாக வரவுள்ளதாக உள்ளது. போலித்தனமான ஏமாற்றுத் தனமான அரசியல் அமைப்பு வரவுள்ளது. இந்த நிலையில் விரைவாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக ஒரு புதியஅணி உருவாகும்.

அது காலத்தின் தேவையாகவுள்ளது. தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற காரணத்தினாலும் அந்த சின்னத்தில் போட்டியிட முடியாது என்ற காரணத்தினாலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எதிர்வரும் தேர்தலில் புதிய அணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது என மேலும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்