யாழில் மீண்டும் தலைதூக்கும் வாள்வெட்டு! – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதோடு, நேற்றும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ். நகரிலிருந்து கோப்பாய் வடக்கிலுள்ள தனது வீட்டிற்கு நேற்றிரவு (திங்கட்கிழமை) சென்றுகொண்டிருந்த சிறிகாந்தன் எனும் இளைஞன் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்த வாள்வெட்டுக் குழுவினர், கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் இளைஞனை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, நவாலி பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நேற்றிரவு புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்தவரையும் வாளால் வெட்டியுள்ளனர்.

இவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் மற்றும் மானிப்பாய் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் மூன்று பேரின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் நின்றிருந்த
யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்களினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தலைதூக்கியுள்ளது. இன்று இரவு இடம்பெற்ற இருவேறு வாள்வெட்டுச்
யாழ் சங்கானை பகுதியில் வாள்களுடன் வீதியில் அட்டகாசம் புரிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஐவரில் நால்வர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*