வவுனியாவில் வெடிக்காத கைக்குண்டுகள் மீட்பு!

வவுனியா மகாகச்கச்கொடி பகுதியிலுள்ள நபர் ஒருவருடைய காணியை நேற்று (14.11) மாலை 5 மணியளவில் துப்பரவு மேற்கொண்டபோது வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த இரண்டு கைக்கண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாமடு பொலிசாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளது.

இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலுதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அப்பகுதியில் மேலும் கைக்குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட நீதிமன்றில் அனுமதியினைப் பெற்று மேலும் தேடுதலை மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்றிய இரண்டு கைக்குண்டுகளையும் செயலிழக்க வைக்க விஸேட அதிரடிப்படையின் அனுமதியைப்பெற்றுள்ளதுடன் அவர்கள் அங்கு சென்று செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக மாமடுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணம் – புன்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியை கடத்திச் சென்ற
வவுனியா -ஓமந்தை பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*