யாழ் பருத்திதுறையில் களவாப்பட்ட 15 போன்களுடன் பருத்தித்துறை பொலீசாரால் இருவர் கைது

கடந்த மாதம் பருத்தித்துறை Abans company உடைத்து பல பெறுமதியான போன்கள் திருடப்பட்டதாக பருத்தித்துறை பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பருத்தித்துறை பொலீசார் மற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலீசாரால் குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றநிலையில் இன்றைய தினம் களவாடப்பட்ட போன் ஒன்றுடன் பருத்தித்துறையை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் மாட்டினார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இன்னுமொருவர் பருத்துறையில் கைது செய்ய்பட்டார் இருவரிடமிருந்தும் களவாடப்பட்ட .

9 இலட்சம் ரூபா பெறுமதியான 15 போன்கள் பருத்தித்துறை பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளன கைது செய்யப்பட்ட இருவரும் பருத்துறையை வதிவிடமாக கொண்ட 21,23 வயதை உடையவர்களாவர் கைது செய்யப்பட்டவர்கள் நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்