வவுனியாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் -இருவர் கைது

சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கணேசபுரத்திலுள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை முச்சக்கரவண்டியில் கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இரு இளைஞர்களையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு கணேசபுரம் மரக்காரம்பளையிலுள்ள தனது வீட்டிற்கு தனிமையில் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் அச்சிறுமியை முச்சக்கரவண்டியினுள் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சென்று பாலியல் வல்றுவிற்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் உறவினர்கள் இது தொடர்பான முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

இதையடுத்து குறித்த சிறுமி நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கு முயன்றுள்ளார். இந்நிலையில் குறித்த உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அப்பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களை சந்தேகத்தில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்