தமிழர் மீதான சித்திரவதைகளை உடன் நிறுத்த வேண்டும் – ஐ.நாவிடம் மீண்டும் வலியுறுதல்

இலங்கையில் இடம்பெறும் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தமிழர்களுக் கான குழு, அவசர வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை தாமதமின்றி ஆரம்பித்து ஐ.நா கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தமிழர்களுக்கான குழு தலைவர் லண்டனில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்,

அசோசியேட்டட் பிரஸ் நடத்திய புலனாய்வு ஊடகவியல் மூலமாக, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொடர் ச்சியான மனித உரிமை மீறல்கள் எந்த அளவு ஆழமானதாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இலங்கையில் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட சம கால சித்திரவதைகள், பாலியல் வன் முறைகள் பற்றிய அறிக்கையிடல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விகள், கரிசனை கள் பற்றிய விடயத்தை அக்கறைக்குரியதாகிறது.

இது மனித உரிமைகள் மற்றும் நல்லி ணக்க செயற்பாடுகள் மேலும் தாமதிக்கச் செய்வதாக அமைகிறது.
தமிழர்களை அடித்து சித்திரவதைபடுத்துதல், நீர்நிரப்பிய பைகள் மூலம் சித்திரவதை செய்தல், தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்குதல், எரியும் சிகரெட்டால் சுடப்படுதல், சூடே ற்றப்பட்ட இரும்பு கம்பிகளால் கட்டுதல், அதற்கான அடையாளங்கள், பாலியல் சித்திரவ தைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்று கள் போன்றவற்றை வாசிக்கும் போது பய ங்கரமாக இருக்கிறது.

இவையெல்லாம், நடைபெறுவது தொடர் பாக பெரும் கவலை என்னவெனில், இலங் கையில் பாதுகாப்பு படைகளை மறுசீரமை ப்பதற்கு இலங்கைக்கு 6.6 மில்லியன் பவு ன்ஸ் வழங்கப்பட்ட பிறகும் நடைபெறுகிறது என்பதே கவலை ஆகும்.
இதுவரை பாதுகாப்பு படை மறுசீரமைக்கப்படவில்லை என்பதையே காட்டி நிற்கிறது. அவ்வாறான வெளிநாட்டு பங்களிப்புக்களின் பிரயோசனமின்மையை சுட்டிக்காட்டுவதாக அசோசியேற்றட் பிறசின் புலனாய்வு அறிக்கை அமைந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன மற்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தந்துள்ள கடந்த காலத்தில் நடந்த மனித உரிமைகளை விசாரிப்பதற்காக கொடுத்த வாக்குறுதிகள் அர்ப்பணிப்பு களை அந்த அறிக்கை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இத்தகைய அரச ஆட்சியின் கீழ் இவ்வா றான குற்றச்செயல்களில் இருந்து அக்கறையற்ற மன்னிப்பு கொடுப்பது தொடர்கின்ற போதும், துஷ்பிரயோகங்கள் அனுமதிப்பது மான வேளையில் இந்த அறிக்கை வெளி வந்துள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற் றச்சாட்டுக்களின், அளவும் ஆழமும் ஐ.நா பொறுப்புடன் அவசரமாக செயற்பட்டு இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக அமைகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் ஆணையகம் செய்ட் பின் ராட் செய்ட் அல் குசைன், எந்தவித தாமதமும் இன்றி இந்த விடயங்களை கருத்தில் எடுத்து எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் சபை கூட்டத்தொட ரின் போது தனது விசாரணை மூலமான கண்டு பிடிப்புக்களை (அறிக்கையை) தெரி விப்பதுடன் தற்பொழுது நடைபெற்றுக்கொண் டிருக்கும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என நாம் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளரை அவசரமாக வேண்டி நிற்கிறோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்