பாடசாலைக்கு பெருமை  சேர்க்கும் மாணவர்கள் பாடசாலையினால் புறக்கணிப்பு!

யா வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை நிர்வாகம் ,மற்றும் அதிபர் ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கம் , பழைய  மாணவர் சங்கம்,வாதரவத்தை கல்வி முன்னேற்ற கழகம் போன்ற நிர்வாகங்ளால் பாடசாலைக்கு  பெருமை  சேர்க்கும்  மாணவர்கள்  புறக்கணிக்கப்படுவதாக குறித்த மாணவர்களின் உறவினர்களால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக  நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த  இந்த  பாடசாலையின் வரலாற்றிலே முதல் தடவையாக செல்வன் கோகிலாதாசன்-விதுசன் என்ற  மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 8AB சித்திபெற்று வாதரவத்தை பாடசாலையின் வரலாற்றில் சிறந்த  பெறுபேற்றினை பெற்றிருந்ததோடு இன்னும் பல பெறுபேறுகளையும் பாடசாலைக்கு சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

அத்துடன் மும்மொழிகளினூடாக சமூக  விஞ்ஞான போட்டியில் தேசியமட்டத்தில் முதல் இடத்தையும் பஞ்சதந்திரப் போட்டியில் (குழுவாக) தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தார்

பாடசாலை நிகழ்வுகளில் பெருமை சேர்க்கும்  மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர்வதற்கும் பாடசாலை சமூகம் தவறியுள்ளதோடு மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் தவறியுள்ளதாக  மாணவர்களின்  பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்

இவ்வாறான குரோத மனப்பாங்குள்ள நிர்வாகங்கள் பாடசாலையின் வளர்ச்சியிலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் எவ்வாறு கூடிய சிரத்தையுடன் செயற்படப்போகிறது என்று மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்

தொடர்டர்புடைய செய்திகள்
அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கான உதவிகளை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்
காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க
தமிழீழ விடுதலைப்புலிகளால் வாதரவத்தை பகுதியில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்றஅமைச்சர்

மறுமொழி இடவும்

*