கனகபுரம் துயிலுமில்லத்தில் சிறீதரனின் அரசியல் வியாபாரம் தொடர்கின்றது

நாம் அநேகமாக இதுவரை கேள்விப்பட்டது ஊரில் உள்ளவர்கள் கோயிலுக்கு கோபுரத்துக்கு அன்னதான மண்டபம் கட்ட மயில்வாகனம் செய்யதிருவிழா நடத்த இவ்வளவு காசு கொடுத்துள்ளார்கள் என திருவிழாக்காலங்களில் அறிவிப்பாளர் கத்திக்கத்தி பலதடவை காசுதந்தவர்களின் பெயர்களை சொல்லுவார்.போதாது என்று மீண்டும் தங்கள் பெயரை சொல்லவைக்க அறிவிப்பாளருக்கு விசேட கவனிப்புக்கள் செய்ய அவரும் திருப்பணிக்கு காசு தந்தவர்களின் பெயரை பத்துத்தடைவ சொல்லி அவர்களை குளிர்மைபடுத்துவார்.இவை எல்லாம் இதுவரை நாம் அறிந்தது.இப்பொழுது நாம் அறிவது.இந்த மண்ணுக்காக முகவரியும் அற்று இதுவரை யார் என்று பெயர் அறியாதபடி பெரும் தியாகத்தை செய்துவிட்டு நடுகல்லும் கூட இல்லாத பெரும் மானமறவர்களான மாவீரர்களின் நினைவிடமான துயிலுமில்லத்தில் அரச பணத்தில் வேலை செய்து கொண்டு அதை தன் சொந்தப்பணம்போலவும் எந்தவிதமான விளம்பரங்களுக்காகவும் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்காமல் தாயகவிடுதலை என்ற ஒரே நோக்கில் தங்கள் இன்னுயிர்களை தந்தவர்களின் புனித நிலத்தில் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சுயவிளம்பர அரசியல்வியாபாரம் இலாபம் தேடுவது.

முன்னாள் போராளிகள் இயகத்தின் மூத்த தளபதிகள் என பலரும் துயிலுமில்லத்தில் அரசியல் இலாபம் தேடவேண்டாமென பலதடவை தெரிவித்துள்ளபோதும் சிறீதரனும் சிறீதரனின் அடிவருடிகளும் அரசாங்கத்தின் பொலிஸ் மற்றும் ஆதரவுகளை வைத்துக்கொண்டு முன்னாள் போhராளிகளை துரோகிகள் என கூறமுனைவதும்.அவர்களை பொலிஸ் அவசர இலகத்துக்கு அழைத்து காட்டிக்கொடுப்பதும் என துயிலுமில்லத்தில் தலைநுழைப்பது தொடர்கின்றது.சிறீதரனின் இத்தகைய போக்குக்காரணமாக பலமாவீரர் குடும்பங்கள் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்ல சிரமதான பணிக்கு செல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மாவீரர்கள் சிங்கள அரசாங்கங்களுக்கு எதிராக போராடியவர்கள்.சிங்கள இனவாதத்திடமிருந்து தாய்மண்ணை மீட்க உயிரை ஈந்தவர்கள்.மாவீரர்கள் ஆறாவது திருத்தச்சட்டத்தின்கீழ் கையெழுத்திட்டுவிட்டு சத்தியபிரமாணம் செய்துவிட்டு களத்திற்கு சென்றவர்கள் அல்லர்.மாவீரர்கள் வித்துடல்களில் சத்தியம் செய்துவிட்டு தாயகக்கனவுடன் சாவினைத்தழுவியர்கள்.சிறீதரனாலோ அல்லது சம்மந்தன் சுமந்திரனோலோ மாவீரர்களின் கனவுகளில் ஒரு துளியையாவது நிறைவேற்ற முடிந்ததா.இல்லையே.அரசாங்கத்துக்கு எதிராக போராடியவர்களுக்கு அரசினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுகின்ற நிதியை துயிலுமில்லத்தில் தனது சொந்த அரசியல் இலாபம் தேடுவதற்காக சிறீதரன் பயன்படுத்தி மக்களையும் மாவீரர்களையும் அசிங்கப்படுத்துவது எவ்வளவு ஈனமானது.அரசியல்வாதிகளின் ஒரு துளி பணமில்லாமல் துயிலுமில்லத்தை பெருங்கோயிலாக அமைக்க பலர் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் இந்த புனித கைங்கரியத்தை முன்னெடுக்க நினைக்கும் எந்தவித விளம்பரங்களையும் தேடும் எண்ணம் இல்லாதவர்களுக்கு சிறீதரன் போன்றவர்களின் நடவடிக்கை அருவருப்பை தருவதுடன்.துயிலுமில்லத்தை நோக்கிய சுயநலமற்றவர்களின் வரவையும் தடுகின்றது என்பதே உண்மை.

About காண்டீபன்

மறுமொழி இடவும்