ஈபிஎஸ்ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இரு அணிகளிடமும் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுயள்ளது. அதிமுக என்ற பெயரை எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும்பாண்மை உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிடிவி தினகரன் அணியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு தேர்தல் ஆணையம் தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தந்திருப்பதாக குறிப்பிட்டார். இந்த தகவலை அடுத்து அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் ஈபிஸ், ஓபிஸ் அணியினருக்கு கிடைத்ததில் டிடிவி தினகரன் தரப்பு அணியினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக செயல்படவில்லை என்றும் மத்திய அரசின் தலையிடு உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக தீர்ப்பு வழங்கி உள்ளது என்று எடப்பாடி அணியினர் கூறியுள்ளனர். இதுகுறித்து கே.பி. முனுசாமி அளித்த பேட்டியில், ஒவ்வெரு அதிமுக தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் உண்மைக்கும் சத்தியத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும் கூறினார். மேலும் இந்த வெற்றிக்காக பாடுப்பட்ட பொதுகுழு உறுப்பினருக்கும், செயற்குழு உறுப்பினருக்கும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்