யாழ்ப்பாணத்தில் 10 கோடி பெறுமதியான கஞ்சா அழிப்பு

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி பெறுமதியான ஒரு டன் கஞ்சா போதைப்பொருள் இன்று (23) தீமூட்டி அழிக்கப்பட்டது.

வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாக பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருளே இவ்வாறு அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த சான்றுப் பொருள்கள் நீதிமன்ற ஊழியர்களினால் எரியூட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்