இளையோரால் இளையோருக்கு நடாத்தப்பட்ட அறம்

இளையோரால் இளையோருக்கு நடாத்தப்பட்ட அறம் செய் என்னும் கலைநிகழ்வு கடந்த 15 ம் திகதி ஐப்பசி மாதம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.. அருமையான திறமைகளுடன் இந் நிகழ்வை சிறப்பித்தார்கள் பேர்லின் மண் கலைஞர்கள்.

செல்வம் என்பது இன்று நிலைக்கும் நாளை அறியோம். ஆனால் கல்வி என்பது என்றும் நிலைப்பது. இவ்வுலகில் வாழ்வதற்கு கல்வி என்னும் விதையே போதுமானதாக உள்ளது. ஆதலாலே இந்நிகழ்வினூடாக பெறப்பட்ட நிதியானது இப் புனிதமான மாவீரர் வாரத்தில் அவர்களின் இலட்சியப் போராட்டத்தையும், வீர மரணத்தையும் தலைவணங்கி, எம் போன்று கனவுடனும், இலட்சியத்துடன் தாயகத்தில் வாழும் எம் சகோதர சகோதரிகளின் கல்விக்காக அனுப்பிவைக்கப்பட்டது. 200இற்கும் மேற்பட்டோர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. கல்வி கற்க தேவையான உபகரணங்களை பெறுகின்ற சகோதரிகளின் ஆனந்தம் மாவீரர்களின் கனவு அழியாது என்பதை உறுதி செய்கின்றது.

இப் புனித வாரத்தில் இவ் அறச்செயலை நிறைவு செய்வதற்கு உறுதுணையாக நின்ற பேர்லின் வாழ் மக்கள் அனைவருக்கும் மற்றும் அதரவு வழங்கிய நிறுவனங்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்