தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நாளை அவரது வல்வெட்டித்துறை இல்லத்தில் கொண்டாடப்படுகிறது!

வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் இல்லத்தில் பிறந்த நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தலைவரின் பிறந்தநாள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளைய தினம் சில முக்கிய திட்டங்களை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பொதுமக்கள் அனைவரதும் புனர்வாழ்வுத் திட்டங்களை விரைவுபடுத்தக் கூடிய வகையில் குறித்த திட்டங்கள் அமையும் என்றும் கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வுகள் நாளை காலையா அல்லது மாலையா இடம்பெறும் என்ற விபரம் பின்னர் அறியத் தரப்படும் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்