அடி முடி காணவியலா அரும்பெரும் தலைவா நீவிர் வாழ்க பல்லாண்டு!

இருந்த போது
தொடர்ந்தவர்களை விட
இல்லாதிருக்கும்
இவ்வேளையில்
தொடர்வோரும்
தேடுவோரும்
பன்மடங்கு.

தேடலையும்
தொடர்தலையும்
உலகத் தமிழர்
உள்ளமெங்கும்
விதைத்து
அகிலமெங்கும்
வியாபித்து
நிற்கும்
பேராற்றலே…

நீவிர்
அடி
முடி
காணவியலா
அரும்பெரும்
ஆற்றலோன்!

கார்த்திகை
மாதமே
காத்திருக்கும்
கரிகாலனே
உந்தன்
வருகை காணாது
கார்த்திகையும்
வருகிறது
வந்த வழியே
போகவும் செய்கிறது..
அடுத்த
முறையாவது
கனவு
நனவாகுமென்ற
நம்பிக்கையில்!

கந்தக மேனியர்
கனவின்
காவல் தெய்வமே
காத்திருப்பது
நாம் மட்டுமல்ல…
காலனும்
காத்திருக்கின்றான்
தன்பெயரில்
அரங்கேற்றப்பட்ட
நந்திக்கடல்
நாடகத்திற்கு
முடிவுரை
எழுதுவதற்காக!

கிழக்கு
அடிவானமும்
உந்தன் வருகையை
முரசறையும்
முனைப்பில்
விடியாமல்
இருண்டே கிடக்கிறது!

விண்ணவரும்
மண்ணவரும்
காத்திருக்கின்றோம்
எம்மினம்
விடுதலை காண
விடியலில்
முகம் புதைத்து
விரைந்தே
வருக!

ம.செந்தமிழ்!

About இலக்கியன்

மறுமொழி இடவும்