தேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினமான இன்று வடமராட்சி வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தேசியத் தலைவரின் வீடு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிறிலங்கா படைகளால் இடித்து அழிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டுக்கு முன்னால் அவரது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் தலைவரின் உறவினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர்.

தலைவரின் பிறந்த தினத்தில் இரு பிள்ளைகள் கேக் வெட்டினர். அவர்கள் தமக்குள் கேக் பரிமாறிக்கொண்டதைத் தொடர்ந்து ஏனையோருக்கும் கேக் வழங்கப்பட்டது. தலைவரின் வீட்டு வளாகத்தில் மரக் கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.

இதேவேளை, இன்று அதிகாலையும் தலைவரின் வீட்டுக்கு முன்னால் இளைஞர் குழுவொன்று கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்