பிரித்தானியா வெளிப்பிராந்தியத்தில் (coventry)நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

பிரித்தானியாவில் வெளிப்பிராந்திய மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு coventry பிரதேசத்தில் நடைபெற்றது.
மண்ணுக்காகவும் மக்களுக்காவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கிப் போற்றும் அதே வேளை அவர்களைப் பெற்றெடுத்தவர்ளையும் உடன் பிறப்புகளையும் போற்றி மதிப்பளிக்கும் வைபவம் தமிழீழத் தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளிலும்ஒவ்வொரு வருடமும் மாவீரர் வார தொடக்கத்தில் இடம் பெற்று வரும் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வுதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுஉணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியினை திரு நவம் அவர்கள் ஏற்றி வைக்க பொதுச்சுடரினை coventry தெற்குப்பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கன்னிங்காம் அவர்கள் ஏற்றி வைக்க அதனை தொடர்ந்து ஈகச்சுடரினை லெப் கேணல் நளாயினி அவர்களின் சகோதரி ஆனந்தி அவர்கள் ஏற்றி வைத்தனர்

தொடர்ந்து நிகழ்வில் எழுச்சி பாடல்களும்,பாராளுமன்ற உறுப்பினர் கன்னிங்காம் அவர்களின் உரையும்,நடனங்களும் நடைபெற்று இறுதியாக தமிழீழக் தேசியக்கொடி கையேந்தல் நிகழ்வோடு உறுதி மொழியுடன் நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலோடு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்