யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்ததினம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களால் தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தின் பல இடங்களில் தமிழீழ தேசியத் தலைவரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட வாழ்த்து பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, கைலாசபதி கலையரங்கின் மேற்றளத்தின் வெளிப்பகுதி உட்பட கலைப்பீடத்தின் பல கட்டிடத் தொகுதிகளிலும் பிறந்தநாள் வாழ்த்து பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இன்று (25) முற்பகல் 11 மணியளவில் பல்கலைக்கழக மாணவர் பொது மண்டபத்தில் கேக் வெட்டப்பட்டது. தமிழீழ வரைபடத்தின் அமைப்புடன் செய்யப்பட்ட கேக் வெட்டப்பட்டு மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.

இதேவேளை, நாளை (27) அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டும் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களிலும் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, விஞ்ஞானபீட வளாகத்தில் மாவீரர் தின பதாகைகளும் கட்டப்பட்டுள்ளன. தேசிய வர்ணங்களான சிவப்பு, மஞ்சல் கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.

About சாதுரியன்

மறுமொழி இடவும்