வவுனியா பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்ததின கொண்டாட்டம்!

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று (26.11) சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கேக் வெட்டி, மாணவர்களுக்கும் கேக் கொடுத்து பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.

எவ்விதமான அச்சுறுத்தல்களும் இன்றி மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதே வேளை யாழ். பல்கலைக்கழகத்திலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்