உணர்வெளிச்சியுடன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க தயாராகும் மட்டக்களப்பு!

உணர்வுபூர்வமான மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம், தரவை மாவீரர் துயிலும் இல்லம், மாவடிமுன்மாரி துயிலும் இல்லம் ஆகியவற்றில் இம்முறை மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.முன்னாள் போராளிகள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள், ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்புக்காக போராடி தன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று தசாப்த கால யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினமாக இது பார்க்கப்படுகின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் பல தடவைகள் மாவீரர் தின நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படும் முதல் மாவீரர் தினம் இதுவென குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய
ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*